ஏற்றுமதியாகும் பொருள்கள் தடையானாலோ, நிராகரிப்பானாலோ, அதன் செலவுகள் ஏற்றுமதியாளர்களின் தலையில்தான் வந்து விழும். இது அந்தத் துறைக்கே சற்று சறுக்கலை ஏற்படுத்தும்.
அடுத்ததாக, சர்வதேச சந்தையில், ஒப்பந்தங்களின்போது அடித்துப் பேரம் பேச இந்தியாவால் முடியாது. இது பிற நாடு சொல்வதைக் கேட்டுகொள்ளும் நிலைக்கு உள்ளாக்கும்.
இந்தியா வளர்ந்து வரும் நாடு. பிற நாடுகளின் நிபந்தனைகளுக்கு உள்ளாகும் போது, அது இந்தியாவிற்கு அவ்வளவு சாதகமாக அமையாது.
இந்தப் பிரச்னைகளைத் தடுக்க இந்தியா தன்னைத் தானே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?
நாட்டிற்கு நாடு நடைமுறைகளும், வழிமுறைகளும் மாறுபடும். இதனால், ஒவ்வொரு நாட்டின் விதிமுறைகளைத் தெளிவாக ஏற்றுமதியாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட பொருள்கள், சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நாடுகளும் கொல்லிகளின் எஞ்சிய அளவு வரம்புகளைக் குறைத்துக்கொண்டு வரும்போது, இந்தியா மட்டும் 2024-ம் ஆண்டு அதன் அளவை அதிகரித்துள்ளது.
இதை வைத்துதான், இந்திய விவசாயிகள் பொருள்களை உற்பத்தி செய்வார்கள். இதுதான் ஏற்றுமதிகளுக்குப் பெரிய சறுக்கலை ஏற்படுத்துகிறது.
இதனால், ரசாயன பயன்பாட்டிலும், எஞ்சிய அளவு வரம்புகளையும் உலகத் தரத்திற்கு இந்தியாவில் மாற்ற வேண்டும்.