`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே’- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

Spread the love

“இந்து ராஷ்டிரா’ என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். “நம் அனைவரின் மூதாதையர்களும் ஒன்றே” என்று அவர் கூறிய கருத்து, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யோகா முகாம்கள் மற்றும் ஆயுர்வேதப் பொருள்கள் மூலம் பெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பாபா ராம்தேவ், தனது சமீபத்திய பேச்சில், “ஹரித்வாருக்கு அருகில் தியோபந்த் உள்ளது. 2009-ல் அங்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நான் அவர்களிடம், ‘நம் மதங்கள் வேறுபடலாம், ஆனால் நம் மூதாதையர்கள் ஒன்றே. இந்து ராஷ்டிரா என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. நம் அனைவரின் மூதாதையர்களும் சனாதன இந்து ஆரிய-வேத மரபைச் சேர்ந்தவர்கள்’ என்று கூறினேன்” என உத்தரப் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனத்திற்குச் சென்றதை நினைவு கூர்ந்தார்.

Baba Ramdev - பாபா ராம்தேவ்

Baba Ramdev – பாபா ராம்தேவ்

மேலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு அறிவுரை வழங்கும் விதமாக, “இந்து ராஷ்டிரா அமைந்தால் முஸ்லிம்கள் எங்கே போவார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். உங்கள் மூதாதையர்களின் பாரம்பர்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தாடி வைத்துக் கொள்ளலாம் அல்லது மழித்துக் கொள்ளலாம்; விருப்பமான ஆடையை அணியலாம், ஆனால் உங்கள் மூதாதையர்களின் குணத்தைப் பின்பற்றுங்கள். இந்துஸ்தானில் முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

ராம்தேவின் இந்தக் கருத்துகளுக்கு உடனடியாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், “அனைவரும் சனாதனிகள் என்றால், ஏன் இத்தனை பிரிவினைகளை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன? இந்து ராஷ்டிரா பற்றிப் பேசுபவர்களிடம் கேளுங்கள். பாபா ராம்தேவிடம் கேளுங்கள். அவர் என்ன நோக்கத்தில் இதைக் கூறுகிறார் என்று எனக்கு எப்படித் தெரியும்? அனைவரும் சனாதனிகள் என்றால் பிரிவினைகளை உருவாக்கும் முயற்சிகள் ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *