இந்த கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் தொடர்பில்லை – மதுரை தன்ஷிக் நகைக்கடை குற்றவாளி நிஷாந்த்

Spread the love

மதுரை தனிஷிக் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 

காவல்துறை தரப்பில் நிஷாந்தை  ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.

நிஷாந்திடம் 5 நாட்கள் காவலில் விசாரணைக்கு செல்வது குறித்து நீதிபதி கேட்டபோது, “எல்லா நகையையும் கொடுத்துவிட்டேன், 5 நாட்கள் விசாரணைக்காக செல்ல விருப்பமில்லை , பயமாக இருக்கிறது ஒரு நாள் போதும் என பதிலளித்த நிஷாந்த் தொடர்ந்து, “ வலதுபுறம் தோளில் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மீனாட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என நீதிபதியிடம் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *