இந்த பையன் கிட்ட ஏதோ இருக்கு.. தோனியை முதலில் பார்த்தபோதே கங்குலியிடம் சொன்னேன்.. சச்சின் வாழ்த்து! | Sachin Tendulkar Pens Emotional Tribute as CSK Legend MS Dhoni Retires From IPL

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சிஎஸ்கே ஜாம்பவான் தோனிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து பதிவை எழுதி இருக்கிறார். தோனியை முதல்முறையாக பார்த்துவிட்டு கங்குலியிடம் சொன்ன விஷயம் தொடர்பாக மனம் திறந்துள்ள சச்சின் டெண்டுல்கர், தோனியின் அற்புதமான கிரிக்கெட் பயணத்தை பாராட்டி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனிலேயே தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது அவரின் ஃபிட்னஸ் ஒத்துக் கொள்ளாத சூழலில், தோனி ஓய்வை அறிவித்துள்ளதாக தெரிகிறது.

Sachin Tendulkar

கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி இருக்கும் தோனிக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வாழ்த்துக்களை கூறி வருகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து பதிவு ஒன்றை எழுதி உள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கர், “வங்கதேசத்தில் தோனி பேட்டிங் செய்வதை பார்த்த போது, அவரின் பவர் ஹிட்டிங்கில் ஏதோவொரு தனித்துவம் இருப்பதை கங்குலியிடம் கூறியது இப்போதும் நினைவில் இருக்கிறது.

தோனியிடம் ஒரு பிரத்யேக திறமை இருப்பதை அறிய முடிந்தது. அங்கிருந்து தோனி எப்படியான ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். தோனியுடன் ஓய்வறையை ஒன்றாக பகிர்ந்து கொண்டதோடு, இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத மகத்தான தருணங்களில் நாங்கள் முக்கிய அங்கமாக இருந்தது பெரும் மகிழ்ச்சியான விஷயம்.

தோனி ஏதோ ஸ்பெஷலாக செய்யப் போகிறார் என்பதை எப்போதும் நம்பிக் கொண்டே இருந்தேன். நான் நினைத்ததை விடவும் அதிகமாகவே சாதித்து காட்டி இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களால் முடிந்த அனைத்தையும் நிறைவாக கொடுத்துள்ளீர்கள். என்னுடைய கிரிக்கெட் பயணத்தை தோனியுடன் பகிர்ந்து கொண்டது அற்புதமான அனுபவமாக இருந்தது. Well Played, MS” என்று பதிவிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் பதிவு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான தோனி, அவருக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர். இதனால் 2011 உலகக்கோப்பை வென்ற தருணத்தை சச்சின் டெண்டுல்கர் நினைவு கூர்ந்து பேசி இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *