இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடியாது: டெல்லியில் போராட்டம் நடத்த புதிதாக 3 இடங்கள் அறிவிப்பு

Spread the love

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண் மல்லியுத்த வீராங்கனைகள், காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போதும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு கொடுப்பது போலீஸாருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதையடுத்து ஜந்தர் மந்தர் மைதானத்தில் இனி போராட்டம் நடத்த முடியாது என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.

டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், “பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கான உரிமையைப் பயன்படுத்தக்கூடிய பொருத்தமான இடங்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட உள்துறை அமைச்சகக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதோடு போராட்டம் நடத்துவதற்கு புதிதாக மூன்று இடங்களை தேர்வு செய்து அறிவித்து இருக்கிறது. அதன் படி மத்திய டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், வடக்கில் உள்ள புராரி மைதானம் மற்றும் ஷாஹ்தராவில் உள்ள CBD மைதானம் ஆகியவை ஜந்தர் மந்தருக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த 66,080 ரூபாயும், புராரி மற்றும் சிபிடி மைதானங்களுக்கு தலா ரூ. 90,000 (பாதுகாப்பு வைப்பு இல்லாமல்) கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தர் சாலை பங்களாக்கள் மற்றும் கடைகளால் சூழப்பட்ட இடமாகும். இங்கு போராட்டம் நடத்துவபவர்கள் அருகில் உள்ள சாலைகளையும் பயன்படுத்துகின்றனர். அதோடு ஜந்தர் மந்தர் பாராளுமன்றத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும், முக்கிய அரசாங்க கட்டடங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இது போராட்டக்காரர்களுக்கு தேவையான தண்ணீர், மலிவான உணவு, கழிப்பறைகள் மற்றும் மர நிழல் போன்ற வசதிகளை வழங்குகிற்து. அதோடு இங்கு போராட்டம் நடத்த கட்டணம் கிடையாது.

கடந்த 9ம் தேதி உச்ச நீதிமன்றம், போராட்டங்களுக்கு தகுந்த மாற்று இடத்தை அறிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டதை அடுத்து, ஜந்தர் மந்தரை போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *