வேலுமணி அணியில் சேர்ந்ததால், கே.பி.அன்பழகனின் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதோடு தருமபுரியை அமைப்பு ரீதியாக இரண்டு மாவட்டமாகப் பிரித்து, டாக்டர் அசோகன், டி.ஆர்.அன்பழகன் ஆகியோரை மாவட்டச் செயலாளர்களாக நியமித்தார்.
இந்த நிலையில் வேலுமணி அணியினர் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியான நிலையில் கே.பி.அன்பழகனுக்கு அமைப்புச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தனக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அன்பழகனுக்கு அதிகாரம் இல்லாத அமைப்புச்செயலாளர் பதவி வழங்கியது பிடிக்கவில்லை. மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் கேட்டார்.
தன்னை எதிர்த்து வேலுமணியுடன் சென்ற இவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கினால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட இரண்டு மாவட்டச் செயலாளர்களும் அதிருப்தி அடைவார்கள் என்பதால் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இதனால் அப்செட்டாகி இருந்த நிலையில்தான் நேற்று நடந்த தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அன்பழகன் புறக்கணித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தவெக-வில் இணையும்படி டாக்டர் விஜயபாஸ்கர் தரப்பில் தொடர்ந்து பேசி வருவதாகச் சொல்லப்படும் நிலையில்தான் இந்தக் கூட்டத்தை அவர் புறக்கணித்தார் என்றும் சொல்லப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் இதற்கான விடை இரண்டொரு நாளில் தெரியும்”‘ என்கிறார்கள்.