`இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும்; ஏன்னென்றால்..!’ – நிர்மல் குமார் | tvk minister ctr nirmalkumar about dmk and admk

Spread the love

தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், சென்னையில் இன்று (ஜூன்.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், “திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாஜக-வின் ஆதரவோடு ஆட்சி அமைக்கச் செயல்பட்டார்கள். அதனால்தான் அவர்களின் கூட்டணிக் கட்சிகளில் இருந்து அவ்வளவு பேர் வெளியேறி இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். பிற கட்சிகளில் இருந்து யாராவது வெளியேறினால் அதற்கும் தவெக-விற்கும் எந்த தொடர்பும் இல்லை.

எந்தக் கட்சியில் இணைந்து செயல்படுவது என்பது அவரவர் முடிவு. தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் என்பது உறுதியாகி உள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி, இ.பி.எஸ், அவருடைய மகன் மற்றும் சில தொழிலதிபர்கள் இணைந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *