இறக்குமதி தட்டுப்பாட்டிலிருந்து உலகளாவிய உணவு உற்பத்தியாளராக உயர்ந்த இந்தியா! வியக்கும் வெளிநாடுகள்… | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

Spread the love

Last Updated:

உற்பத்தியோடு நின்றுவிடாமல், ஏழை எளிய மக்களுக்கான மிகப்பெரிய பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில், உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் நலத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

News18
News18

உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்தியா தற்போது உலகளாவிய உணவு உற்பத்தியாளராக மாறி வெளி நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுதந்திரம் பெற்ற ஆரம்பக் காலத்தில், இந்தியா குறைந்த விவசாய உற்பத்தி திறன், போதிய நீர்ப்பாசன வசதியின்மை மற்றும் பருவமழை பொய்ப்பது போன்ற காரணங்களால் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டைச் சந்தித்தது. 1950-51 ஆம் ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி வெறும் 50.82 மில்லியன் டன்களாக மட்டுமே இருந்தது. இதன் காரணமாக, மக்களின் பசியைப் போக்க அமெரிக்காவின் ‘PL-480’ போன்ற வெளிநாட்டுத் திட்டங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் தானியங்களை இந்தியா பெரிதும் நம்பியிருக்க வேண்டியிருந்தது. வெளிநாட்டுக் கப்பல்கள் மூலம் வரும் உணவுக்காகக் காத்திருந்த இந்த இக்கட்டான நிலை “கப்பல் முதல் வாய் வரை” (ship-to-mouth) என்று அப்போது வர்ணிக்கப்பட்டது.

இந்தத் தட்டுப்பாட்டு நிலையை மாற்றியமைப்பதில் ‘இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படும் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் முக்கியப் பங்கு வகித்தார். அவர் அறிமுகப்படுத்திய வீரிய ரக விதைகள் மற்றும் அறிவியல் பூர்வமான விவசாய முறைகள் மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறத் தொடங்கியது. 1965 இல் இந்திய உணவுப் போக்குவரத்துக் கழகம் (FCI) தொடங்கப்பட்டு, உணவு தானியங்களைச் சேமித்து வைக்கும் முறையும், பொது விநியோகத் திட்டமும் வலுப்பெற்றன.

பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில், உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தியோடு நின்றுவிடாமல், ஏழை எளிய மக்களுக்கான மிகப்பெரிய நலத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

2020 கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ (PMGKAY) திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது டிசம்பர் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONRC) திட்டத்தின் மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலிருந்தும் தங்கள் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தரவுகளின்படி, 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 376.563 மில்லியன் டன்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், இந்தியா உணவு தானியங்களை இறக்குமதி செய்த நிலையில் இருந்து மாறி, தற்போது உலகிற்கே ஏற்றுமதி செய்யும் அளவிற்குத் தற்சார்பு அடைந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் செய்திகள்/Breaking and Live Updates/

இறக்குமதி தட்டுப்பாட்டிலிருந்து உலகளாவிய உணவு உற்பத்தியாளராக உயர்ந்த இந்தியா! வியக்கும் வெளிநாடுகள்…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *