ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NSE: STARHEALTH; BSE: 543412), இளம் தொழில் வல்லுநர்கள், திருமணமான தம்பதிகள் மற்றும் வளர்ந்து வரும் குடும்பங்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட “யங் ஸ்டார் நியோ’ (Young Star NEO) எனும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் அறிமுகத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமான ‘டைம் டிராவல்’ (Time Travel), இளம் வயதிலேயே காப்பீட்டைப் பெறுவதன் மூலம் பிரீமியம் தொகையில் வயது சார்ந்த சலுகையை இந்தியக் காப்பீட்டுத் துறையிலேயே முதன்முறையாக வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் முதல் வேலையிலிருந்து திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை நிலைக்கு மாறும்போது, இக்காப்பீடு தொடர்ந்து அவர்களுக்குப் பயன்படும் வகையில் வெளிநோயாளி பராமரிப்பு, மனநல மேலாண்மை, உடற்பயிற்சி மையங்களுக்கான அணுகல் மற்றும் வெல்னஸ் வெகுமதிகள் போன்ற நன்மைகளையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
இளம் வயதிலேயே மருத்துவ காப்பீடு எடுக்கும் முடிவை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தாண்டிய தேவைகளான — மருத்துவரைக் கலந்தாலோசித்தல், மனநல உதவி பெறுதல், சுறுசுறுப்பான உடற்பயிற்சி மற்றும் பிற்காலத்தில் வாழ்க்கைத் துணையையும் காப்பீட்டில் சேர்த்தல் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயது வரையிலான நபர்களுக்குக் கிடைக்கக்கூடிய ‘யங் ஸ்டார் நியோ’, ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகை (வரம்பில்லா காப்பீட்டுத் தொகையைத் ‘Unlimited Sum Insured’ தேர்வு செய்யும் வசதியுடன்) மற்றும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கான பாலிசி கால அளவுகளையும் வழங்குகிறது.
தொழில்துறையிலேயே முதன்முறை: ‘டைம் டிராவல்’ பிரீமியம் பாதுகாப்பு
யங் ஸ்டார் நியோ-வின் ‘டைம் டிராவல்’ என்ற தொழில்துறையின் முதல் அம்சமானது, வாடிக்கையாளர்களின் பாலிசி புதுப்பித்தல் பிரீமியம் தொகையை (காப்பீட்டுக் கோரல் செய்யப்படும் வரை) மாறாமல் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், காப்பீட்டுக் கோரல் (Claim) செய்த பிறகும் கூட, புதுப்பித்தலின் போது வாடிக்கையாளரின் அப்போதைய உண்மையான வயதிற்கு ஏற்ப பிரீமியம் கணக்கிடப்படுவதற்குப் பதிலாக, அவர் பாலிசியில் இணைந்த வயது + 1 ஆண்டு (Entry Age + 1 year) என்ற அடிப்படையிலேயே பிரீமியம் கணக்கிடப்படும் (பொருந்தக்கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்டது). பெரும்பாலான வயது-அடிப்படையிலான பிரீமியம் லாக் (Age-lock) அம்சங்கள் முதல் கிளைம் உடனேயே முடிவுக்கு வந்துவிடும். ஆனால், அவை எங்கு முடிகிறதோ அங்கிருந்தே இந்த ‘டைம் டிராவல்’ அம்சம் தொடங்குகிறது.
புதிய அறிமுகம் குறித்து ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (MD & CEO) திரு. ஆனந்த் ராய் பேசுகையில்:
“வாழ்க்கை முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது, ஆனால் உங்கள் பிரீமியத்தைக் கணக்கிடப் பயன்படும் வயது எப்போதும் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஒரு கால இயந்திரம் (Time machine) தேவையில்லை — இளம் வயதிலேயே காப்பீடு தொடங்குவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் மட்டுமே போதுமானது. யங் ஸ்டார் நியோ-வின் ‘டைம் டிராவல்’ அம்சத்தின் மூலம், 24 வயதில் இணையும் ஒருவரது புதுப்பித்தல் பிரீமியம், அவர் 25, 35, 45 என வயதாகிக் கொண்டே சென்றாலும், பாலிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு 25 வயது என்ற அடிப்படையிலேயே கணக்கிடப்படும். உங்கள் பிரீமியம் வயதைப் பின்னோக்கி நகர்த்துவது என்பதில் நாங்கள் குறிப்பிடுவது இதையே தான். உங்கள் வாழ்க்கை மாறும்போது, இளம் வயதிலேயே ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது முதன்மை தேர்வாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
எப்போதோ ஒருநாள் தேவைப்படக்கூடிய மருத்துவமனை சிகிச்சையை மட்டும் நோக்கமாகக் கொண்டு உங்கள் முதல் பாலிசி அமைந்திருக்கக் கூடாது. அது ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும், உங்கள் மனநலத்தைப் பேணவும், உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுவதோடு—பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையை பாலிசியில் சேர்க்க விரும்புவதையும் அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும். தனித்துவமான சுகாதாரக் காப்பீட்டுத் துறையில் முன்னோடியாக விளங்கும் நாங்கள், டைம் டிராவல் (Time Travel), ஃபியூச்சர் ஷீல்ட் (Future Shield) மற்றும் ஸ்டார் த்ரைவ் (Star THRIVE) ஆகியவற்றின் மூலம் இந்தத் தேவைகளை ஒன்றாகக் கொண்டு வருகிறோம். வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள மக்களுக்கு இக்காப்பீட்டை மிகவும் பயனுள்ளதாக்கவும், மேலும் பல இளைஞர்களை இளம் வயதிலேயே காப்பீடு எடுக்க ஊக்குவிக்கவும், சுகாதாரக் காப்பீட்டின் பரவலை விரிவுபடுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார்.