நாடாளுமன்றத்தில் நடந்த வெளியீடு
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண நிதி அமைச்சர் என்வர் எர்டோகன் (Enver Erdogan) மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்தச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட இளையராஜா தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் “தமிழ்நாட்டின் ஒரு சிறிய, தொலைதூரக் குக்கிராமத்தில் பிறந்து, இன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இந்தக் கௌரவத்தைப் பெற்றிருப்பது என்னை நெகிழச் செய்கிறது.
என் இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்ற மக்களுக்கும், என்னுடன் பயணித்த கலைஞர்களுக்கும், தலைமுறை கடந்து என் இசையை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார்.
உலகளாவிய இசைச் சுற்றுப்பயணம்
இளையராஜா தனது 50-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக உலக நாடுகளுக்கு நேரடி இசைக்கச்சேரி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி (செப்டம்பர் 26) மற்றும் பிரிஸ்பேன் (அக்டோபர் 5) நகரங்களில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.