“இளைய கலைஞராக அவதாரம் எடுக்கும் உதய்… ஆர்.எஸ். பாரதி புகழாரம்!” – Kumudam

Spread the love

தஞ்சையில் நேற்று திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், விவசாயி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும் ,மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் ,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்  முதலமைச்சர் விஜயை தரக்குறைவாகவும்,பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும் கூறி  தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டு 9 பிரிவுகளின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது குறித்து  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியாவது, ஆட்சியில் இருக்கும் விஜய் எல்லா ஆட்சியையும் மிஞ்சும் அளவிற்கு சர்வாதிகாரத்தின் உச்சத்திலிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். சட்டமன்றம் கூடவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது என்பது எத்தகைய ஜனநாயக விரோத செயல்.?

இந்திய ஜனநாயகத்தை கண்டிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது. விஜய் ஜனநாயகம் என்ற படத்தில் நடித்தாரே தவிர ஜனநாயகம் குறித்து ABC  கூட தெரியாதவர்தான் முதலமைச்சர். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் செய்ய வேண்டிய வேலையைத்தான் செய்துள்ளார். மு. ஸ்டாலின் ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்கு சரியாக தண்ணீர் வந்து சேர்ந்தது இது குறித்து பேசும்பொழுது கூட்டத்தில் இருந்து யாரோ திரிஷாவை பற்றி பேசி உள்ளார்கள்.

திரிஷா வீட்டில் மட்டும் தண்ணீர் வருகிறதா என யாரோ கூட்டத்துல் கேட்டார்கள். அதற்கு, ஆம் அவர்கள்(திரிஷா) வீட்டில் மட்டும் தண்ணீர் வரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது? திரிஷா வீட்டில் தண்ணீர் வருகிறதா என யாரோ கேட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார் திரிஷா வீட்டில் மட்டும் தண்ணீர் வரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இதில் என்ன தவறு இருக்கிறது இதில் என்ன உலக மகா தவறு இருக்கிறது?

எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் ஏன் எடப்பாடியார் காலத்திலும் இதுபோன்ற நிறைய பேசி உள்ளோம். ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதியப்பட்டது இல்லை. அவதூறு பேச்சு என்ற வழக்கில் இதுவரை கைது நடவடிக்கை செய்யப்பட்டதே கிடையாது.

கைது நடவடிக்கை காரணமாக உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞராக மாற்றி வருகின்றனர். இன்று முதல் உதயநிதி ஸ்டாலினைஇளைய கலைஞர்’” என்று அழைப்பதற்கு விஜய் வழிவகுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கைது செய்து அழைத்து சென்று போகும் போது  முன்னாள் தலைவர் கருணாநிதியை காவல்துறையினர் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றது  போலவே உள்ளது என்றும், உதயநிதி ஸ்டாலினை மக்கள் மத்தியில் மேலும் உயர்த்தும் விதமாக, அவரை இன்று முதல் “இளைய கலைஞர்” மற்றும் “இளைய கருணாநிதி” என்று அழைப்பதற்கான வழியை தற்போதைய அரசு தன் செயல்மூலம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் விமர்சித்தார்

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து விட்டு ஆளில்லா மைதானத்தில் பந்தாட நினைக்கிறார் முதலமைச்சர்  விஜய்.சட்டமன்றத்தில் பதில் கூற பயந்துதான் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர்.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *