இஸ்லாம் மதத்திற்கு மாறினால் பிற்படுத்தபட்டோர் சான்றிதழ் கிடையாது – நீதிமன்ற தீர்ப்புழ் சொல்வதென்ன? | No Backward Class certificate upon converting to Islam – What does court verdict say?

Spread the love

தூத்துக்குடியைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “என் இயற்பெயர் பரமசிவம். நான் இந்துப் பெற்றோருக்குப் பிறந்து, இஸ்லாம் மதத்தைத் தழுவி என்னுடைய பெயரையும் மாற்றிவிட்டேன். இதற்கு கயத்தாறு சுன்னத் ஜமாத் அமைப்பு 2015ல் சான்று வழங்கியது.

இது குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியானது. இஸ்லாமிய சடங்குகள் மற்றும் வழக்கப்படி வஹிதாவைத் திருமணம் செய்தேன். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். “முஸ்லிம் லெப்பை’ பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்குரிய சாதி சான்று கேட்டு, கயத்தாறு தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன்.

அவர் அதை நிராகரித்து விட்டார். எனவே எனக்கு சாதி சான்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கும், தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்த உத்தரவில், “பரமசிவம், ‘சமீர் அகமது’ என்று தன் அடையாளத்தை மாற்றிக்கொள்வது, இந்திய அரசியலமைப்பு பிரிவின் கீழ், ஒரு தனிநபர் தன் அடிப்படை உரிமை.

அவ்வாறு மதம் மாறிய பின்னர், இட ஒதுக்கீட்டு சலுகைகளைத் தொடர்ந்து கோரும்போது, அதன் நியாயம் மற்றும் சட்டப்பூர்வ தன்மை குறித்த மற்றொரு விவாதத்திற்கு அது வழிவகுக்கிறது.

‘ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதும் அவர் ஒரு முஸ்லிமாகிறார். அவர் மதம் மாறுவதற்கு முன்பு சார்ந்திருந்த சமுகத்தின் அடிப்படையில், இஸ்லாமிய சமுதாயத்தில் அவரது நிலையைத் தீர்மானிக்க முடியாது. இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறுபவர்கள், மதம் மாறினால் அந்தச் சலுகையைப் பெற முடியாது என்ற சூழல் இருந்ததால், இஸ்லாம் மதத்திற்கு மாறுவதைத் தடுக்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

இதனால் தமிழக பிற்படுத்தபட்டோர் ஆணையம் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 9 இல் ஒரு அரசாணையை வெளியிட்டது. ‘தாவூதி, போஹ்ராக்கள் போன்ற சில பிரிவினர் சமூக மற்றும் கல்வி ரீதியாக முன்னேறிய நிலையில் உள்ளனர். அன்சார், தக்காணி முஸ்லிம்கள், துபேகுலா, லப்பைகள், மாப்பிளா, ஷேக், சையது ஆகிய ஏழு முஸ்லிம் உட்பிரிவினர் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்புகள், சீர்மரபினர் அல்லது பட்டியல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் யாரேனும் புதிதாக இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள் இந்த ஏழு வகுப்புகளுக்குள் வந்தால் அவர்களுக்கு ‘பிற்படுத்தபட்ட வகுப்பு முஸ்லிம்’ எனச் சான்றிதழ் வழங்கி, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய ஆணையம் பரிந்துரைத்தது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *