ஈரான் போர் முடிந்தால் தங்கம் விலை எகிறுமா? நிபுணர் விளக்கம்|Will Gold Hit ₹1.2 Lakh? Expert Gives Big Prediction

Spread the love

ஈரான் போரும், உலக பொருளாதாரமும்

ஈரான் போரினால், கச்சா எண்ணெய் விலையில் மிகுந்த நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. போர் முடிந்த உடன்தான், கச்சா எண்ணெய்யின் சராசரி விலையைக் கணிக்க முடியும்.

கச்சா எண்ணெய்யின் சராசரி விலை தெரிய வரும்போது, உலக பொருளாதாரத்திற்கும், உலக நாடுகளில் பணவீக்கத்திலும் எவ்வளவு பாதிப்பு என்று தெரிய வரும்.

அதையொட்டி, தங்கம் விலை நாணயங்களின் மதிப்பை வைத்து கணக்கிடப்படுமா… வட்டி விகிதங்களை வைத்து கணக்கிடப்படுமா… அல்லது இரண்டையும் சேர்த்து கணக்கிடப்படுமா என்பது தெரிய வரும். அதை வைத்து தங்கத்தின் விலை நிர்ணயமாகும்.

பொதுவாக, பணவீக்கம் அதிகரிக்கும் போது, வட்டி விகிதம் குறைக்கப்படாது. அதனால், மீண்டும் தங்கம் பணவீக்க ஹெட்ஜாக மாறும். அப்போது மீண்டும் தங்கத்தின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பும்.

இப்போது உடனடியாக இது உருவாகாது… ஈரான் போர் முடிந்து, பணவீக்கத்தைப் பொறுத்து இது அனைத்தும் அமையும்” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *