‘உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்!’- நா தழுதழுக்க,பேசி ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்ட துரைமுருகன்| dmk durai murugan about stalin health and tvk

Spread the love

தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ” நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை முடிக்கின்ற ஆற்றல் இங்கு வந்திருக்கின்ற கழக தோழனுக்கு உண்டு. நாம் களத்தில் இருக்கிறோம், எத்தனையோ தேர்தல்களை பார்த்திருக்கிறோம், வெற்றி பெற்றிருக்கிறோம், வீழ்த்தியும் இருக்கிறோம், வாகை சூடி இருக்கிறோம். தேர்தலில் அது சகஜம்.

ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு மாயாவி போல் வந்த ஒன்று இங்கே நின்றுவிட்டது. இந்த மாயாவி தமிழ்நாட்டில் பரவி இருக்கிறது, ஆனால் இது வெகு நாளைக்கு நிற்காது. ஒருமுறை ஏமாந்துவிட்டால், இனி திமுககாரனை எந்த கொம்பனாலும் ஏமாற்ற முடியாது.

ஸ்டாலின் - திமுக

ஸ்டாலின் – திமுக

மன்னாதி மன்னனனை எல்லாம் தோற்கடித்த கட்சி. இடைத்தேர்தல் வருகிறது. இந்த களம் நமக்கு ஒரு முக்கியமான களம். இந்த களத்தில் நாம் வென்றாக வேண்டும். நீங்கள் பழைய திமுககாரனாக மாறுங்கள். திமுகக்காரர் என்றால் சாதாரணமானவர் அல்ல.

இந்தக் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் காட்டியாக வேண்டும். எனக்கு என்ன செய்வீர்களோ தெரியாது.. போங்கள் காலில் விழுவீர்களோ, கையை பிடிப்பீர்களோ தெரியாது.. வெற்றியை நம்முடைய தலைவர் காலில் சேர்ப்பது தான் முக்கியம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *