உச்ச நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை: கபில் சிபல் கருத்து|‘I Have Little Faith’: Kapil Sibal’s Sharp Remark on Supreme Court

Spread the love

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடந்த குளறுபடிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் நடக்கும் போராட்டம் – இந்த இரண்டும்தான் இந்தியாவின் இப்போதைய பரபரக் காட்சிகள்.

ஆனால், இந்த இரண்டு குறித்துமே உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல்.

நேற்று (அக்டோபர் 10) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கபில் சிபல், “நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்கிறோம். ஆனால் எங்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்த அரசு விலக வேண்டும் என்றே நாட்டின் மக்கள் கருதுகிறார்கள்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இந்தச் சூழலில் அரசியலமைப்பைக் காப்பாற்றக்கூடிய ஒன்று இருக்கிறது என்றால், அது இந்திய உச்ச நீதிமன்றம் மட்டுமே.

ஆனால், தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று எனக்குச் சலித்துவிட்டது. இதை நான் எனது சொந்தக் கருத்தாகப் பேசுகிறேன்.

அங்குச் செல்வதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

எனக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. எது நடக்க வேண்டுமோ, அது நடக்கும்.

வாக்காளர்களின் பெயர்கள் தவறாக நீக்கப்படுவதாகவும், தவறாகச் சேர்க்கப்படுவதாகவும் நாங்கள் பலமுறை உச்ச நீதிமன்றத்திடம் கூறினோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *