உட்கட்சி மோதல் உச்சகட்டம்: ஈபிஎஸ், சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனிதனியே ஆலோசனை  – Kumudam

Spread the love

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதோடு, 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க எடப்பாடி முயற்சி செய்தத்தாக குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுக்குழுவை எடப்பாடி கூட்ட வேண்டும் என சிவி சண்முகம் தலைமையிலான அணி வலியுறுத்த தொடங்கி உள்ளது. 

இந்நிலையில் நேற்றைய தினம் பெருபான்மையை தவெக அரசு நிரூபிக்க சட்டசபை கூடியது. அதில் சிவி சண்முகம், வேலுமணி தலைமையிலான அதிமுக அணி தவெகவிற்கு ஆதரவு அளித்து வாக்களித்தனர். தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பறித்துள்ளார். 

சட்டசபையில் அதிமுகவிற்கான அங்கீகாரம் பெற இருதரப்பும் முயற்சி செய்து வருகிறது. இன்று காலை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை இருதரப்பினரும் சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். அதே போல சிவி சண்முகம் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன்  எம்ஆர்சி நகர் அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

இருதரப்பினருக்கும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *