இந்தச் சம்பவம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தன் எக்ஸ் பக்கத்தில், “திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் இருவர் உயிரிழந்தனர்.
ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருசிலரது இருப்பைக் காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிர்களை இழந்துள்ளோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.