உத்தரப்பிரதேசம்: காங்கிரஸ் VS சமாஜ்வாதி தொகுதிப் பங்கீட்டால் மோதல்! – பின்னணி என்ன?| Uttar Pradesh: Congress vs Samajwadi Party Clash Over Seat Sharing

Spread the love

உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சியினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட தொடங்கி இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட (403 தொகுதிகள்) உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்திலேயே தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் சமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணி வைக்க விரும்புகின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது.

ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ்

ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ்

காங்கிரஸ் VS சமாஜ்வாதி

கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள சூழலில் தொகுதிப் பங்கீட்டால் காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சியினிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி 150 முதல் 200 தொகுதிகள் வரை கோருகிறது. ஆனால், சமாஜ்வாதி கட்சியோ காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 50 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது.

இதற்குக் காரணமாகக் கடந்த கால தேர்தல் புள்ளிவிவரங்களையும் கள நிலவரத்தையும் சமாஜ்வாதி சுட்டிக்காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *