வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை வழக்கம்போல் தான் விடிந்தது.ஆனால் மற்றகாரியங்களெல்லாம் மந்தமாகவே நடந்தன. அந்த வளாகத்தில் ஏதோ ஒரு அசாதாரணமானஅமைதி குடி வந்தாற்போலிருந்தது.இதற்கும் மற்றவர்களெல்லாம் நார்மலாகத்தான் இருந்தார்கள்.
ஹவுஸ்ஓனர் புளோயர் மூலம் மரத்தடிகளின் கீழ் போர்வையாகி கிடந்த இலைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.பாயம்மா பேத்தியுடன் வாக்குவாதம் அவரது கணவரின் மெதுவான நடைப்பயணம் மேல்வீட்டு ஹோட்டல்காரம் மாவின் சென்னையிலிருக்கும் மகளுடனான அலைபேசி உரையாடல் எல்லாம் சகஜமே.
ஆனாலும் ஏதோ வித்தியாசம் இருந்தது உண்மை.
கரோலின் வீட்டில் சர்ச்சுக்கும் டீக்கடைக்காரர் வீட்டில் ஊருக்கும் கிளம்பிக் கொண்டிருந்ததும் தெரிந்தது.தலைக்கு குளிக்க வைக்கும் போது நிகழும் தன்வியின் அழுகுரல் பலமாகக் கேட்டது. தன்வி அழுவதை தடுக்கச் செல்ல வேண்டுமென்று நறுவி அடம் பிடிப்பதும் தெரிந்தது. இருந்தும் ஏதோ உறுத்தியது.
செம்பா ,குண்டுமணி, சிட்டு,மொன்ன மூக்கி , நீளவாலி,குட்டிமணி,குயிலி,பீலிகா (செல்லப்பெயர்கள்) இவர்களின் குரலோ நடமாட்டமோ இல்லை.
வராண்டா துடைக்கவந்த அம்மிணி “என்னாச்சு இவங்களுக்கு யார் சத்தத்தையும் காணோமே வழக்கமாக மரத்தடியில் கிடக்கும் பழங்களையும் காணோம் .என்னவோ ஆயிருக்கும் போல இன்னைக்கு?’ என்றாள் .
‘ எனக்கும் தெரியலை. விடியற்காலையில் எல்லாரையும் ஒண்ணாத்தான் பார்த்தேன். தனித்தனியாக முறைச்சிகிட்டு இருப்பாங்க வழக்கமாக. ஆனா எல்லாரும் காலாவைப்
பத்தி பேசிகிட்டு இருந்தாங்க.ஆனால் கவலை தெரிந்தது முகங்களில். என்னன்னு தெரியலை’ என்றார் அம்மணியின் கணவர்.
‘காலாவைத்தான் இவர்களுக்குப் பிடிக்காதே.