உலகம் எண்ணெய் பார்க்கும் நேரத்தில் சீனா வெள்ளி இறக்குமதி சாதனை|While World Eyes Oil, China Quietly Buys Silver

Spread the love

அமெரிக்கா – ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.

இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.

ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி, கடந்த மார்ச் மாதத்தில் சீனா 836 டன் வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் சீனா ஒவ்வொரு மார்ச் மாதமும் கிட்டத்தட்ட 306 டன் அளவில் தான் வெள்ளியை இறக்குமதி செய்திருக்கிறது.

ஆக, இந்த எண்ணிக்கை இதுவரையில் இல்லாத மிகப்பெரிய அளவிலான இறக்குமதியாக பார்க்கப்படுகிறது.

சீனா வெள்ளியை இறக்குமதி செய்வதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று, தங்கத்தை விட, வெள்ளி விலை குறைவாக இருப்பதால், சீன ரீடெயில் முதலீட்டாளர்கள் வெள்ளியில் அதிக முதலீடுகள் செய்கின்றனர்.

இரண்டு, சோலார் ஆற்றல் மற்றும் அது சம்பந்தமான உற்பத்திகளில் மிக தீவிரம் காட்டி வருகிறது சீனா. அந்தத் தயாரிப்புகளுக்கு வெள்ளி மிக முக்கியமானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *