உலகம் முழுவதும் ரிலீசானது ‘ஜெயிலர் 2’ .. திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம்! – Kumudam

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிகாலை 6 மணிக்கே முதல் காட்சிகள் திரையிடப்பட்டன. திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி சிறப்பு முன்காட்சிகளுக்குப் பதிலாகக் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள திரையரங்குகளில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரளத் தொடங்கினர்.

திரையரங்க வளாகங்களில் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பேனர்களுக்குப் பாலாபிஷேகம் செய்தும், மாலைகள் அணிவித்தும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், திரையரங்கிற்கு வெளியே பட்டாசுகளை வெடித்தும், மேள தாளங்கள் முழங்க நடனமாடியும் திரைப்படத்தின் வருகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *