Tamilnadu
oi-Hema Vandhana
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்றால் படகு சவாரி, மலை அழகு, இயற்கை காட்சிகள் என ரசிக்க நிறைய விஷயங்கள் இருப்பது தெரிந்த விஷயம்தான்.. ஆனால் இப்போது இந்த லிஸ்ட்டில்புதிதாக ஒரு இடமும் சேர்ந்துள்ளது. ஆம், ஒரே இடத்தில் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி, ரஜினிகாந்த், ஷாருக்கான் என பல பிரபலங்களை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும் மெழுகுச் சிலை அருங்காட்சியகம்தான் அது.. இந்த சிலைகளை பார்க்கும் சுற்றுலா பயணிகள் அப்படியே மெய்மறந்து நின்றுவிடுகிறார்களாம்..!!
ஊட்டி படகு இல்ல வளாகத்தில் சுற்றுலாத் துறையும் தனியார் நிறுவனமும் இணைந்து சர்வதேச மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளன.// பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் இப்போது சுற்றுலா பயணிகள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

ஊட்டியில் பிரபலங்கள் சிலை
இங்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அன்னை தெரசா உள்ளிட்டோரின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களுக்கும் இங்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், ஷாருக்கான், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் சிலைகளும் உள்ளன. ஹாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என 20க்கும் மேற்பட்டோரின் சிலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விஜய் சிலை
இந்த மியூசியத்தில் முதலமைச்சர் விஜயின் மெழுகுச் சிலைதான், இப்போது மொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.,. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஊட்டிக்கு சுற்றுலா வரும் மற்றவர்களும் இந்தச் சிலையை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்..
இந்த சிலைகள் பார்ப்பதற்கு அப்படியே சம்பந்தப்பட்ட பிரபலங்கள் நேரில் நிற்பது போல தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சிலைகளின் அருகில் நின்று போட்டோ எடுக்க சுற்றுலாப் பயணிகள் ஆசைப்படுகிறார்கள்.. முக்கியமாக விஜயின் மெழுகுச் சிலையுடன் எடுத்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பலர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஊட்டியின் குளிர்
மெழுகுச் சிலைகளை உருவாக்குவது ஒரு பக்கம் என்றால், அவற்றைப் பாதுகாப்பது இன்னொரு முக்கியமான விஷயம். காரணம், வெயில் அதிகமாக இருக்கும் இடங்களில் மெழுகு உருகிவிடும் வாய்ப்பு உள்ளது… அப்படி நடந்தால் சிலைகளின் வடிவமும் பாதிக்கப்படும்.
ஆனால் ஊட்டியில் எப்போதுமே குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் இந்தப் பிரச்சினை இல்லை.. இங்குள்ள இயற்கையான குளிர், மெழுகுச் சிலைகள் உருகாமல் திடமாக இருக்க உதவுகிறது. இதனால் சிலைகளின் உருவமும் முகத்தில் இருக்கும் நுணுக்கமான அம்சங்களும் அப்படியே காட்சியளிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகள்
ஊட்டி படகு இல்லத்துக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். குடும்பத்துடன் வருபவர்கள் படகு சவாரி முடித்துவிட்டு ஏரியைச் சுற்றிப் பார்த்துச் செல்வதும் வழக்கம்… இப்போது அதே வளாகத்தில் மெழுகுச் சிலை மியூசியமும் வந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மற்றொரு அனுபவத்தை தந்துள்ளது.. ஊட்டி ஏரியின் அழகு, குளிர்ந்த காற்று, இதில் தங்களுக்குப் பிடித்த தலைவர்கள், நடிகர்களின் சிலைகள் என ஒரே இடத்தில் பல விஷயங்களையும் அவர்களால் ரசிக்க முடிகிறது.
முக்கியமாக இந்த சிலைகளை குழந்தைகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.. மோடி, விஜய், ரஜினிகாந்த், ஷாருக்கான் என தங்களுக்கு தெரிந்த செலிபிரிட்டிகளின் சிலைகளை நேரில் பார்ப்பது, குதூகலத்தை ஏற்படுத்தி விடுகிறது..
இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற ஊட்டியில், இப்போது இந்தப் புதிய அருங்காட்சியகமும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் ஈர்ப்பாக மாறியிருப்பதுதான், நீலகிரியின் தற்போதைய ஹாட் டாபிக்காகும்..!!