ஊத்தங்கரையில் டியூஷன் செல்வதாக கூறி சென்ற சிறுவன் மாயமான வழக்கில் திடீர் ட்விஸ்ட்! ஷாக்கான போலீஸ்! | There is a twist in Uthankarai boy missing case

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட சிறுவன் வழக்கில் திடீர் திருப்பமாக அவராகவே கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. சென்னைக்கு சென்றிருந்த அவரை போலீஸார் மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மகன் சஞ்சய். 12 வயதான இவர் ஊத்தங்கரை அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன் தினம் காலை பள்ளிக்குச் சென்ற சஞ்சய் மாலை வீடு திரும்பியுள்ளார்.

Uthankarai boy missing case

டியூஷன்

பின்னர் வீட்டிலிருந்து டியூஷன் செல்வதாக கூறி சென்ற சிறுவன் சஞ்சய், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிங்காரபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி கேமராக்கள்

முதற்கட்டமாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுவன் சஞ்சய் அந்த வழியாக வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்பதும் பின்னர் இரு சக்கர வாகனத்தில் ஒருவருடன் செல்வதும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கிறது.

தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். 12 வயது சிறுவன் லிப்ட் கேட்ட போது யாரேனும் கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செஞ்சி 7 வயது சிறுமி

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான புகாரில் 13 நாட்களுக்கு மேலாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவன் ஒருவன் லிப்ட் கேட்டுச் சென்று மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திடீர் திருப்பம்

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனை யாரும் கடத்தவில்லை, அவர் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றது தெரியவந்தது. சென்னையில் தனியே சுற்றிக் கொண்டிருந்த சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது இந்த விவரங்கள் தெரியவந்தன. இதையடுத்து அந்த சிறுவனை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

கோபத்தில் சென்ற சிறுவன்

சிறுவன் கிடைத்த தகவல் அறிந்ததும் பெற்றோர் சற்று நிம்மதி அடைந்தனர். எனினும் தங்களால் அவர் கோபித்துக் கொண்டு சென்றது தெரியவந்ததும் அவர்கள் மிகவும் வருந்தினர். பிள்ளைகள் தப்பு செய்தால் கண்டிப்பது பெற்றோரின் கடமை. ஆனால் இதை உணராமல் சில சிறுவர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

பெற்றோர்கள்

நல்ல வேளையாக காவல் துறை கண்ணில் சஞ்சய் பட்டதால் அவர் தற்போது பத்திரமாக அவரது பெற்றோரிடம் சேர்த்து வைக்கப்படுகிறார்கள். இதே சமூகவிரோத கும்பலிடம் சிக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. சிறுவர்களும் பெற்றோர் செய்வது நன்மைக்கே என்பதையும் வெளியே இருக்கும் ஆபத்துகளை அறியவும் வேண்டும். பெற்றோருக்கு குழந்தைகளுக்கு திட்டுவதோ அடிப்பதோ, மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதோ செய்யாமல் அன்பால் புரிய வைக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *