`எங்களை சந்திக்க தேர்தல் ஆணையம் அஞ்சுவது ஏன்? ஞானேஷ் குமார் தப்ப முடியாது..!'- ராகுல் காந்தி காட்டம்

Spread the love

டெல்லியில் இன்று (அக்.6) எஸ்.ஐ.ஆர். முறைகேடு விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி, விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணி பேரணி
இந்தியா கூட்டணி பேரணி

பாதுகாப்புப் பணிக்காக டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த மாதிரியான போராட்டங்களில் முன்வரிசையில் நின்று போராடும் திமுக, இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை.

இந்தப் பேரணியின் போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி, “நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் நாட்டின் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டனர். முழு நாடும் இதை நம்புகிறது.

நாட்டின் இளைஞர்களும் இதை நம்புகிறார்கள். என்னைத் தடுத்த காவல்துறையினரும்கூட இதைத்தான் சொல்கிறார்கள். உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

“பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத் ஆகியோர் ‘வாக்குத் திருட்டு’ மூலம் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.

அவர்களுக்கு ஞானேஷ் குமார் உதவியிருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மோடி - அமித்ஷா
மோடி – அமித்ஷா

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அல்லது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் என யாருமே தப்ப முடியாது. நமது நாட்டிற்குச் செய்யப்பட்டது தேசத்துரோகம். இதில் இருந்து யாரும் தப்பித்து ஓட முடியாது.

கோடிக்கணக்கான இந்திய மக்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எங்களை சந்திக்க தேர்தல் ஆணையம் அஞ்சுவது ஏன்? காவல்துறை ஏன் எங்களைத் தடுத்து மிரட்டுகிறது?” என்று பேசியிருக்கிறார்.

இந்திய கூட்டணி சார்பில் பேரணி

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *