`எங்கள் பேச்சை கேட்காமல் சல்மான் கானுடன் பணியாற்றுகிறார்’- நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு

Spread the love

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் நேற்று மாலை மும்பை ஜுகு பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் இருந்து தனது காரில் கிளம்பியபோது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார். ஆனால் அவரது கார் டிரைவருக்கு இத்துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டது. டிரைவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.

செயல்படாமல் போன துப்பாக்கி

டைகர் ஷெராப் தனது பிஎம்டபிள்யூ (BMW) செடான் காரில் கால்பந்து மைதானத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, ​​இருவர் குறைந்தது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் துப்பாக்கியுடன் காரின் ஜன்னலுக்கு மிக அருகில் வந்தவர்களில் ஒருவர், சுட முயற்சிக்கும்போது துப்பாக்கி இயங்காமல் போனதாகத் தெரிகிறது.

இதனால் டைகர் ஷெராப் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் காயம் அடைந்ததும் அருகில் இருந்த டைகர் ஷெராப் ஓட்டுநர் இருக்கைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

காரின் மீதும் சாலையிலும் ரத்தக் கறைகள் காணப்படுகின்றன. அப்போது ஒரு பெண், அந்த நடிகரைப் பார்த்து, “ஜல்தி லே கே ஜாவோ (அவரை விரைவாக அழைத்துச் செல்லுங்கள்), டைகர்” என்று கூறினார். டைகர் ஷெராப் பாதுகாப்பாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அருகில் இருந்த மற்றொரு நபரும் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு காணொளி வெளியானது. அதில், தன்னை அனில் பண்டிட் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் ஒருவர், தான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறி, டைகர் ஷெராப் தங்கள் இலக்குப் பட்டியலில் இருப்பதாகவும், அவர் தங்கள் அறிவுறுத்தல்களைக் கேட்கவில்லை என்றும், சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக குரல் மெசேஜ் ஒன்றும் சமூக ஊடகத்தில் பரவியது. அதில் ஒரு நபர்,”நான் அனில் பண்டிட். லாரன்ஸ் பிஷ்னோய்க்கு நான் தம்பி போன்றவன். இன்று டைகர் ஷெராபுக்கு என்ன நடந்ததோ, அதற்கு நாங்கள்தான் அதாவது ஹர்மன் சாந்துவும் நானும் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்.

திரையுலகில் எவருமே எங்களுடன் இணங்கிச் செயல்படாமல், சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றினால், அவர்கள் கொல்லப்படுவார்கள். இதுவே முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை. சல்மான் கான், லாரன்ஸ் மற்றும் விலங்குகளை நேசிக்கும் பிஷ்னோய் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், உங்கள் குடும்பத்தில் யாரையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். உங்கள் செல்லப் பிராணிகளான நாய்களைக் கூட நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,”‘இந்தச் சம்பவத்தில் டைகர் ஷெராப் காயமின்றி தப்பினார். ஆனால் அவரது ஓட்டுநர் காயமடைந்தார்”என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *