நம்முடைய கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட ‘எட்டு தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்’ என்றும் நான் பெரிதும் நம்புகிறேன்.
தேர்தலில் நம்முடைய கட்சித் தோழர்கள் அனைத்து தொகுதிகளிலும் கட்டுக்கோப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளில் மட்டும் தோழர்களிடையே ஒற்றுமை குறைபாடு இருந்ததாக தகவல்கள் வருகின்றன. அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும், தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் நம்முடைய கட்சியின் பணிகளைப் பாராட்டியுள்ளனர். களப்பணி ஆற்றிய தோழர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, விரைவில் ‘மாவட்ட செயலாளர்கள் கூட்டம்’ மற்றும் தேர்தல் பணிக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.”