பொதுவாக ஏகாதசி என்றாலே, பசுவான் கிருஷ்ணரை நினைத்தபடி உண்ணாமல் விரதம் இருக்கும் தினம் என்பது தெரிந்ததுதான். மகாபாரத காலத்திற்கு முன்பிருந்தே உள்ள இந்த விரதத்தை பாண்டவர்களும் அனுசரித்தார்கள். ஆனால் அவர்களுள் விதிவிலக்காக பீமன் மட்டும் ஏகாதசி விரதம் இருக்க முடியாமல் தவித்தார். காரணம், பீமனால் ஒருவேளைகூட சாப்பிடாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்குச் சாப்பாட்டுப் பிரியர் அவர்.
ஆகையினால் அவருக்கு ஓர் ஏக்கம். ‘என் சகோதரர்கள் அனைவரும் ஏகாதசி விரதம் இருந்து முக்தி அடைவார்கள். ஆனால். என்னால் மட்டும் அவ்வாறு செய்ய இயலாதே. நான் என்ன செய்வேன்’ என்று நினைத்தவர், மகா விஷ்ணுவின் அம்சமேயான வியாசரிடம் சென்று யோசனை கேட்டார்.
வேதத்தையே வகுத்தவரான வியாசர், ‘இயல்பாகவே உனக்கு இவ்வளவு பசி இருப்பதால் எல்லா ஏகாதசியிலும் உன்னால் விரதம் இருக்க முடியாது என்பது உண்மை. ஆனால், வருடத்தில் ஒரு முறை வரும் ஜேஷ்ட ஏகாதசி அதாவது வைகாசி-ஆனி மாத வளர் பிறை ஏகாதசி அன்று மட்டும் நீர் கூட அருந்தாமல் ஒரு நாள் முழுவதும் கடுமையாக விரதம் இரு அது மற்ற எல்லா ஏகாதசி தினங்களிலும் விரதம் இருந்த பலனை உனக்குத் தரும்” என்று உபதேசித்தார்.
வியாசர் கூறியபடியே பிமனும் இந்த விரதத்தை மிகக் கடுமையான முறையில் கடைப்பிடித்தார். இதனால் இந்த ஏகாதசி ‘பீம ஏகாதசி’ என்றும் போற்றப்படுகின்றது. இந்த ஏகாதசி அன்று துளி நீர் கூட அருந்தாமல் கடுமையாக விரதம் இருந்து விஷ்ணுவை வணங்குவோர்க்கு, பலன் முழுமையான கிடைத்து, முடிவில் மோட்சம் கிட்டும் என்பதில், துளிக்கூட சந்தேகமில்லை.
நிர்ஜலம் என்றால், ஜலம் அருந்தாமல் என்று அர்த்தம். அதனால் இந்த ஏகாதசி நிர்ஜல ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
சூரிய உதயம் முதல்மறுநாள் சூரிய உதயம் வரை துளி நீரும் அருந்தாமல் கடைப்பிடிக்க வேண்டிய இந்த விரதம், இந்தியாவில் கோடைக் காலத்தில் வருவதால் கடைப்பிடிப்பது மிகவும் கடினம். எனினும் பசுவான் அருளால் இதனைக் கடைப்பிடிப்போரும் உள்ளார்கள்.
மார்க்கண்டேய புராணம் மற்றும் விஷ்ணு புராணத்தின் படி ஏகாதசி நாள் விஷ்ணுவின் ஒரு வடிவமாகும். இந்த நாளில் அனுசரிக்கப்படும் விரதம் அனைத்துப் பாவங்களையும் போக்கும் என்று கூறப்படு கின்றது. நிர்ஜல ஏகாதசி விரதத்தை முடிப்பவர் விஷ்ணுவின் பரிபூரண அருளைப் பெறுவார் என்பதால், இவ்விரதம் வைஷ்ண வர் களால் மிகவும் பிரபலமாகவும் கண்டிப்பாகவும் அனுசரிக்கப் படுகின்றது. நிர்ஜலா ஏகாதசி விரதத் தினை அனுசரிப்பவர்களை ஆயுள் நிறைவிற்குப் பின் விஷ்ணுவின் தூதர்களால், வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்கின்றன புராணங்கள்.
ஒப்பு உயர்வு அற்ற இந்த நிர்ஜலா ஏகாதசி, ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் என்ற இடத்தில் அமையப் பெற்றிருக்கும் ஜகதீஷ் ஆலயத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. உதய்பூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிரமாண்டமான விஷ்ணு கோயில். 1651ஆம் ஆண்டு மேவார் மன்னர் மகாராணா ஜகத் சிங் என்பவரால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர், பூரி ஜெகந்நாதரின் அம்சமாகக் கருதப்படுகின்றார்.
பழங்கால புராணக் கதைகளின்படி, பூரி சென்று தினமும் இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்ற மன்னரின் தீவிர பக்தியை மெச்சி, பசுவான்
விஷ்ணுவே மன்னரின் கனவில் தோன்றி உதய்பூரில் இந்தக் கோயி லைக் கட்ட அருள்பாலித்ததாக நம்பப்படுகின்றது முகலாயர் படை யெடுப்பின்போது சேதமடைந்த இந்த ஆலயம் 1723இல் மகாராணா சங்கிராம் சிங் என்பவரால் புனரமைக்கப்பட்டது. அதுவே தற்போது நாம் தரிசிக்கும் ஆலயம்.
நிர்ஜலா ஏகாதசி அன்று இங்கே திரனாக வரும் பக்தர்கள் உணவு, நீர் ஏதும் இன்றி கடுமையான விரதம் மேற்கொண்டு, பழங்களை இறைவனுக்கு நைவேதியமாக சமர்ப்பித்து வணங்குகின்றனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாம்பழங்கள் உள்ளிட்ட சிறப்பு பிரசாதங்களை இறைவனுக்குப் படைத்து வழிபடுவார்கள்.
மேலும். இந்த நாளிய உதய்பூர் பகுதியில் பட்டம் விடும் பாரம்பரிய திருவிழாவும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பூஜை நிறைவேறிய பின் அங்கு உள்ள பக்தர்கள் அனைவருக்கும் மாம்பழத்தைச் சாறு பிழிந்து அதையே பிரசாத மாசுக் கொடுக்கின்றனர். இது வேறு எந்தத் தலத்திலும் இல்லாத வித்தியாசமான வழிபாடு இயன்றால் நிர்ஜலா ஏகாததி அன்று இத்தலம் சென்று வழிபடலாம். (இந்த வருடம் 25.6.2026 அன்று நிர்ஜலா ஏகாதசி) அல்லது, அவரவர் இல்லத்தில் இருந்தே இத்தலத்து தெய்வங்களையும் பகவான் விஷ்ணுவையும் மனதில் நினைத்து வழிபடலாம். இயன்றவர்கள் விரதம் இருக்கலாம். எப்படிச் செய்தாலும் முழு மனதாக பசுவானை நினைத்தும் செய்யும்போது அதற்கான பலனையும் முழுமையாகத் தந்து முடிவில் வைகுண்டத்தையும் வழங்குவார். பகவான் விஷ்ணு.



