பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி தனிநபர்கள் இருவரின் பெயர்களில் வெறும் ரூ. 2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், தவெக அரசு மீதும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீதும் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் ரமேஷ் உறவினர்கள் வாங்கியதாக தகவல் வெளியானது. மேலும் அமைச்சர் ரமேஷ்க்கும் இதில் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” கோயில் விவகாரத்தில் உண்மை தெரியாமல் பேசுகின்றனர். அரசின் மீது ஊழல் கரையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.