
என்னுடன் நடிக்க உள்ளவர்கள் என பெரிய நடிகைகளின் பெயர்கள் சொல்லப்படும், ஆனால் இறுதியில் அவர்கள் படத்தில் நடிக்கவரமாட்டார்கள். எனது முந்தைய வேடங்களையும், தோற்றங்களையும் கண்டு பல நடிகைகள் என்னுடன் நடிக்கத் தயங்கியுள்ளனர். அதனால் தான் மதுபாலா இந்த படத்தில் நடிக்க்க வருவாரா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. கதை பிடித்து மதுபாலா வரச் சம்மதித்ததால் எனது அந்த கவலை நீங்கியது. ஜூன் 19-ம் தேதி சினிமா திரையரங்குகளுக்கு வரும்போது, ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற படபடப்புடன் காத்திருக்கிறேன். எனது ஆரம்பகால வாழ்க்கையில் நல்ல கதாநாயகிகளுடன் நடிக்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்தது. அப்போது ஹேமா மாலினியுடன் நடிக்க்கவேண்டும் என மனதில் வைத்திருந்தேன். அது நடக்கவில்லை, ஆனால் அதே குடும்பத்தைச் சேர்ந்த மதுபாலாவை நாயகியாகப் பெற்றதில் மகிழ்ச்சி. தலைமுறை மாறியபோது, நான் அவர்களுக்கு ஏற்ற ஒரு மனிதனாக மாறிவிட்டேன். ஒதுங்கிவிடாமல் தொடர்ந்து பயணித்ததால் தான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. இது புதிய தலைமுறை எனக்கு அளித்த பரிசு” என்றார்.