“மேயாத மான்’, ‘ஆடை’, ‘குளு குளு’ படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது ’29’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be
இதில் பேசியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், “இப்போ நான் ரொம்ப பாசிட்டிவாக இருக்கிறேன் என எல்லாரும் சொல்றாங்க. அதுக்கு காரணம் வாழ்க்கையில நிறைய அடிவாங்குனதுதான்.
சினிமாவில் இயக்குநராக வேண்டுமென தனியார் ஐடி நிறுவன வேலையை விட்டு வந்தேன். என்னை இயக்குநராக பார்க்க 12 வருடம் ஆனது. எனக்கு 29 வயது இருக்கும் போதுதான் வீட்டிலும் கல்யாணம் செய்ய சொல்லி அழுத்தம் இருந்தது. முப்பது வயதை தொட்டுவிட்டால் ஜாதகத்தில் நிராகரித்து விடுவார்கள், வேலையிலும் நிராகரித்து விடுவார்கள், படங்களிலும் நிராகரித்துவிடுவார்கள்.