‘என்னப்பா சொல்ல மாட்டீங்களா…’ – உதயநிதியின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி! |”Won’t You Tell Me?’ – Edappadi K. Palaniswami Tries to Get Into Udhayanidhi Stalin’s Car, Sparks Buzz”

Spread the love

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை நிகழ்வுகளை முடித்து விட்டு கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் காரில் ஏற முயன்றார். பின்னர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக தன்னுடைய காரை நோக்கி சென்ற சம்பவம் சட்டமன்ற வளாகத்தில் கலகலப்பூட்டியது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இதேமாதிரி தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்று பின்னர் தன்னுடைய காரில் ஏறி சென்றிருந்தார். அதைப் பற்றி உதயநிதியே ஒரு முறை நகைச்சுவையாக சட்டசபையில் பேசியிருந்தார். இந்நிலையில், இன்றும் அப்படியொரு சம்பவம் நடந்திருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *