“என்னை விட சினிமா மீது காதல் கொண்டவர் என் இச்சக்கா”: மம்மூட்டிக்கு மோகன்லால் வாழ்த்து!”Ichakka Has More Passion Than Me”: Mohanlal’s Emotional Note on Mammootty’s 75th Birthday!

Spread the love

நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

வாழ்த்து தெரிவித்த அவர், “50 படங்களுக்கு மேல் இணைந்து நடித்திருக்கிறோம். நான் மரியாதையுடனும் அன்போடும் “இச்சக்கா’ என்று அழைக்கும் மனிதருக்கு எனது இதயப்பூர்வமான 75-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமா வரலாற்றிலேயே இரண்டு முன்னணி நடிகர்கள் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு.

திக்கா குரிசி, கொட்டாரக்கரா, சத்யன், நசீர் போன்ற மாபெரும் முன்னோடிகள் விட்டுச்சென்ற கலைப் பாரம்பர்யத்தை நாங்கள் இருவரும் இணைந்து முன்னெடுத்துச் சென்றோம்.

நாங்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் சரி, தனித்தனிப் படங்களில் நடித்திருந்தாலும் சரி, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு எப்போதும் முழுமையான உழைப்பைக் கொடுக்கவே முயன்றிருக்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *