கும்பகோணம், பட்டீஸ்வரம் அருகே உள்ள முழையூர், பகுதியை சேர்ந்த தம்பதி மதன்(28)– வனிதா. இவர்களுக்கு, கடந்த 16ம் தேதி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியராக பணியாற்றுபவர் கடலுார் மாவட்டம், சுரப்குப்பம் பகுதியைச் சேர்ந்த அலமேலு(35) இவர் மதன் குழந்தை பிறப்பு குறித்து தங்கமோதிரத்திற்கு பதிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

இந்நிலையில், மதன், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில், தன் மகனுக்கு மோதிரம் கேட்டு அலமேலு உடன் தகராறு செய்துள்ளார். அதற்கு அலமேலு, சீனியாரிட்டி படி தான் ஒவ்வொரு குழந்தைக்கும் மோதிரம் வழங்குவார்கள் என்கிற விபரத்தை கூறி மதனை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் சத்தம்போட்டுக் கொண்டே மதன் சென்றுள்ளார்.