பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் மூத்த சகோதரர் ஸ்ரீ வதன் தனக்கும், தனது சகோதரருக்கும் (பிரம்மானந்தம்) இடையேயான உறவு குறித்து உருக்கமாகப் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பிரம்மானந்தத்தின் சகோதரர் ஸ்ரீ வதன் ,” நாங்கள் உடன்பிறந்தவர்கள். நான்கு பேர் இறந்துவிட்டனர், இப்போது நாங்கள் இருவர் மட்டுமே எஞ்சியிருக்கிறோம்.

எங்கள் சொந்த ஊரில் நான் மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் அவர் இந்த ஊருக்கு வந்திருந்தார், ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றுவிட்டார்.