“என் மகனுக்கே அபராதமா”.. டென்ஷனான இன்ஸ்பெக்டர்.. போலீஸ் ஏட்டுக்கு கிடைத்த தண்டனை! | Noida Traffic police head constable transferred after fines Rs.30,000 inspector’s son

Spread the love

International

oi-Nantha Kumar R

நொய்டா: ”என்னுடைய மகனுக்கே ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கிறாயா?” எனக்கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஏட்டை, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வாகனங்களில் நம்பர் பிளேட்டை மறைத்து வைத்து செல்வது சட்டப்படி குற்றமாகும். இப்படி செல்வோருக்கு போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்ய முடியும்.

Noida Traffic

அந்த வகையில் தான் உத்தர பிரதேச மாநிலம் நொய்டா ‘நாலெட்ஸ் பார்க்’ போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நகுல் என்பவர் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 16ம் தேதி மாலையில் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஹுண்டாய் கிரிட்டா’ கார் ஒன்று வந்தது. அந்த காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் இரந்த ‘நம்பர் பிளேட்’ மறைக்கப்பட்டு இருந்தது. இதை கவனித்த ஏட்டு நகுல் உடனடியாக சென்று அந்த காரை நிறுத்தினார்.
காரில் இருந்த இளைஞரை வெளியே வரும்படி கூறினார்.

ஆனால் கார் இருக்கையில் இருந்த நபர் அவரை கண்டுக்கெள்ளவில்லை. காரின் டிரைவர் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டிருந்தார். காரை விட்டு வெளியே வரவில்லை. இதனால் ஏட்டு நகுல் ‘நம்பர் பிளேட்’டை மறைத்து வாகனம் ஓட்டியது உள்பட பிற போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ரூ.30 ஆயிரத்தை அபராதமாக விதித்து ‘செல்லான்’ வழங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் உடனடியாக தனது தந்தைக்கு போன் செய்து பேசி நடந்த சம்பவத்தை கூறினார். அவரது தந்தை பெயர் வினோத் குமார். இவர் நொய்டாவின் ‘நாலெட்ஸ் பார்க்’ போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி ஆவார். உடனடியான வினோத் குமார் வந்தார். அதேபோல் போலீஸ் ஏட்டு நகுல் கொடுத்த அலர்ட்டால் எஸ்ஓஜி எனும் சிறப்பு நடவடிக்கை குழுவில் உள்ள போலீசாரும் வந்தனர்.

அப்போது ஏட்டு நகுல் நடந்த சம்பவம் பற்றி இன்ஸ்டெக்டர் வினோத் குமார் மற்றும் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டரிடம் கூறினார். அதன்பிறகு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் கடந்த 14ம் தேதி நடந்தது. இந்நிலையில் தான் தற்போது திடீரென்று ஏட்டு ரகுல் போக்குவரத்து காவல் பணியில் இருந்து இருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பாக விசாரித்தபோது தனது மகனுக்கு அபராதம் விதித்ததால் ஏட்டு நகுல் மீது இன்ஸ்பெக்டர் வினோத் குமார் கடும் கோபமடைந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது இன்ஸ்பெக்டர் வினோத் குமாரிடம் அவர் எதிர்த்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான புகாரை தொடர்ந்து போக்குவரத்து துணை காவல் ஆணையர் ஏட்டு நகுலை, ஸ்டேஷனில் இருந்து காவல் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *