தங்கம் என்றால் என் சகோதரிக்கு வீக்னெஸ். என்னுடைய தங்கம் அவரிடம் நிறைய உள்ளது.
ஏ.ஆர்.எஸ் கார்டன் எம்.ஜி.ஆர் கொடுத்தது என்பது தவறானது. அது உழைப்பில் வாங்கியது.
அந்த ஏ.ஆர்.எஸ். கார்டனின் மெயின் ஃபவுன்டேஷன் நான் தான். நான் ஏ.ஆர்.எஸ்.கார்டனை விற்க மாட்டேன், விற்பனை செய்யவும் விட மாட்டேன்.
என் மீதானப் புகார் வேடிக்கையாக இருக்கிறது. புகார் அளித்திருப்பது அதிர்ச்சியாகவும் உள்ளது.
மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் போதும் என நினைக்காத ஒரு விஷயம் பணம் தான்.
நானும் என் சகோதரியும் ஒரே மாதிரி தான் உடை அணிவோம். ஒற்றுமையாக இருந்த சகோதரிகள் இடையே பிரச்சனை வர பணம் தான் காரணம்.
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுள் உதவி செய்வார்” என்று பேசியிருக்கிறார்.