"என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்" – கேட்கிறார் அமைச்சர் விஜய் பாலாஜி

Spread the love

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் தலைமையில் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, ” பொங்கல் விழாவில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை என்னுடைய வீட்டிற்கு ஆவணங்களை எடுத்துக் கொண்டு வா என இரவில் நான் அழைத்ததாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் தரச் சொல்லுங்கள்.

அமைச்சர் விஜய் பாலாஜி

மக்களுக்கு நல்லது செய்தால் இது போன்று விமர்சனங்கள் நிறைய வரும். அதனை ஏற்கும் மனப்பக்குவம் எனக்கு நிறைய உள்ளது. மக்கள் எங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். கடந்த 25 ஆண்டுகளாக இதுபோன்ற விமர்சனங்களை பார்த்துவருகிறோம். இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. முகம் தெரியாதவர்களால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்படும் இது போன்ற வதந்தி தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *