“என் வாழ்க்கை என்னுடன் புதைக்கப்படும்” – தனது வாழ்க்கையைப் படமாக்குவது குறித்து சல்மான்கான் பளீச்! | “My life will be buried with me”: Salman Khan says he will not allow a film to be made about his life

Spread the love

பின்னர் தனது உடல் எடை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “‘பாய்’ (சல்மான்) குண்டாகிவிட்டார். இதோ, கேலி செய்துகொள்ளுங்கள்” என்று கூறினார். அதோடு தன்னைத் தொடர்ந்து கேலி செய்யுமாறு சவால் விடும் வகையில் தனது தொப்பி, ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட் ஆகியவற்றை அவர் கழற்றினார்.

மேலும் முதலில் உங்களைப் பாருங்கள் என்று கூறிய அவர், மற்றவர்களின் உடல் அமைப்பைக் கேலி செய்வதற்குப் பதிலாக, மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் தங்கள் பெற்றோரின் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதில் கலந்து கொண்ட நடிகை கரிஷ்மா கபூர், சல்மான் கானிடம் ஒருவேளை உங்களது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக (biopic) எடுக்கப்பட்டால், அதை யார் இயக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த சல்மான் கான், படத்தின் வகையைப் பொறுத்து சூரஜ் பர்ஜாத்யா, கபீர் கான், சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் டேவிட் தவான் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

இருப்பினும், தனது வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒருபோதும் எடுக்கப்படாது என்று பின்னர் தெளிவுபடுத்திய அவர், தனது வாழ்க்கை என்னோடு புதைக்கப்படும் கூறினார்.

நடிகர் ஷாருக்கானுடன் நீண்ட காலம் கருத்து வேறுபாடு இருந்தது குறித்து கரண் ஜோகர் கேட்டபோது, ”இது உங்களால் நிகழ்ந்ததா அல்லது வேறொருவரால் நிகழ்ந்ததா? என்று தெரியவில்லை. ஆனால் இப்போது எங்களுக்குள் உறவு சுமுகமாகிவிட்டது. தற்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. நீண்ட காலமாகவே நிலைமை நன்றாகத்தான் உள்ளது” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *