விஜய்க்கு ராகுல் காந்தி அருகே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா இருவரும் மேடையேறி புத்தகத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் முதல்வர் விஜய்யைச் சந்தித்த, பிரியங்கா காந்தி கடந்த 22 ஆண்டுகளாக தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை விஜய்யிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘அந்தப் பெண்ணுக்கு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை’ என பிரியங்கா காந்தி விஜய்யிடம் கூறியிருக்கிறார்.

இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட விஜய், அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் நலம் விசாரித்து ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசியும் அனுப்பியிருக்கிறார்.