எலிகள் மூலம் பரவும் உயிர்க்கொல்லி நோய்: அர்ஜென்டினா பயணத்தில் நேர்ந்த விபரீதம்.| Deadly Disease Transmitted by Rats: A Tragic Incident During a Trip to Argentina.

Spread the love

அர்ஜென்டினாவிலிருந்து ஏப்ரல் 1-ம் தேதி 149 பயணிகளுடன் புறப்பட்ட ‘எம்.வி ஹோண்டியஸ்’ சுற்றுலா கப்பலில், அதிபயங்கர ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவியுள்ளது. அர்ஜென்டினாவில் பறவைக் கழிவுகளின் தூசியைச் சுவாசித்ததே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதுவரை 3 பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல் மற்றும் தசைவலியுடன் தொடங்கி, 72 மணி நேரத்தில் நுரையீரலைச் செயலிழக்கச் செய்யும். இதற்குத் தடுப்பூசியோ, மருந்தோ இல்லை என்பதால் இதன் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது.

ஹான்டா வைரஸ்

ஹான்டா வைரஸ்
Twitter

கப்பலில் பணியாற்றும் 61 ஊழியர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என்பது உறுதியாகியுள்ளது. எனினும், அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். வரும் மே 11-ம் தேதி இக்கப்பல் ஸ்பெயினின் டெனெரிஃப் துறைமுகத்தை அடைய உள்ளது. இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *