அஜித் குமார் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது.
“கிளாடியேட்டர்’ ஆவணப்படத்தின் டிரெய்லர் பிரத்யேகமாகச் சில திரையரங்குகளில் திரையிட்டிருக்கிறார்கள்.
இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். டிரெய்லரில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் அவர், “அஜித் திரும்ப ரேஸுக்கு வந்தது டிராபி வெல்லவோ, சக்சஸ்ஃபுல்லா இருக்கவோ கிடையாது. அனைத்தும் சாத்தியம் என நிரூபிப்பதற்காகத்தான். அனைவருக்கும் அவரை நடிகராகத்தான் தெரியும்.
ஆனால், சிலருக்கு மட்டும்தான் அவரிடம் கனவுகளைத் தேடிச் செல்கிற குணம் இருப்பது பற்றித் தெரியும்” எனப் பகிர்ந்திருக்கிறார்.