அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். இவர் தமிழக அரசியலில் நேற்று பேசுபொருளாக இருந்தார்.
எங்க கட்சி எம்.எல்.ஏ எஸ்.காமராஜை காணவில்லை என ஆளுநரிடம் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் புகார் அளிக்க அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் காணவில்லை என சொல்லப்பட்ட எஸ்.காமராஜுடன் மீண்டும் ஆளுநர் மாளிகை வந்தார் தினகரன்.

எஸ்.காமராஜ் ஆதரவளித்திருப்பதாக தவெக போலி கடிதம் கொடுத்திருப்பதாக கூறினார். அமமுகவுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ இருப்பதால் கட்சி தாவல் தடை சட்டம் வராது என குயுக்தியாக யோசித்து போலி கடிதம் தயாரித்து கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து, எஸ்.காமராஜ், தன் சுயநினைவுடன் தவெக-வுக்கு ஆதரவு கடிதம் எழுதும் வீடியோ வெளியானதுடன், தினகரன் பொய்யான குற்றச்சாட்டு சொல்வதாக தவெக தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்வங்களால் தமிழகத்தை தாண்டி பேசப்படும் நபரானார் எஸ்.காமராஜ். குறிப்பாக மன்னார்குடி தொகுதிக்குள் பலரும் இதனை விவாதிக்க இரவின் அமைதியை கடந்தும் இந்த விவகாரம் பரபரத்தது.