ஏற்கெனவே 2 மனைவிகள், 5 குழந்தைகள்; பள்ளி மாணவியுடன் 3-வது திருமணத்துக்கு முயன்ற லாரி ஓட்டுநர் கைது! | lorry driver arrested for attempting a third marriage with a schoolgirl

Spread the love

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த மே மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரின் பெற்றோர், காட்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். அதன்பேரில், போலீஸாரும் மாயமான மாணவியைத் தேடத் தொடங்கினர்.

இந்த நிலையில், மாணவிக்கும், காட்பாடி அருகேயுள்ள வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரகாஷ் (31) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, அவரைத் தேடியபோது ஆந்திராவில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரகாஷை பிடித்த போலீஸார், அவரின் கட்டுப்பாட்டில் இருந்த மாணவியையும் மீட்டனர்.

தொடர்ந்து, போக்சோ பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தியதில், பள்ளிக்குச் சென்று திரும்பும்போது சிறுமியிடம் பேசி பழகி காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் பிரகாஷ். ஆனால், பிரகாஷுக்கு ஏற்கெனவே 2 முறை திருமணமாகி, முதல் மனைவிக்கு 3 குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு 2 குழந்தைகளும் இருப்பது மாணவிக்குத் தெரியவில்லை.

பிரகாஷ் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதை நம்பி மாணவி அவருடன் சென்றுள்ளார். மாணவியை ஆந்திராவுக்குக் கடத்திச் சென்ற பிரகாஷ் செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு மாணவியுடன் குடும்பம் நடத்திவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு பிரகாஷை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்த போலீஸார், மீட்கப்பட்ட மாணவியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *