‘ஏழைகளுக்கு உதவுவார் எனக் கேள்விப்பட்டேன்’ – சல்மான் கானிடம் பண உதவி பெற வந்த பெண் மும்பையில் மீட்பு | Destitute woman seeking financial aid from Salman Khan rescued in Mumbai

Spread the love

அவர் மனக்குழப்பத்தில் இருந்தபோதிலும், சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்குச் செல்வதற்கான வழியைக் கேட்பதிலேயே குறியாக இருந்துள்ளார். தனது வறுமையைப் போக்க நடிகர் சல்மான் கான் கண்டிப்பாக தனக்குப் பண உதவி செய்வார் என்று அவர் மிக உறுதியாகக் கூறினார்.

ஜோத்ஸ்னா பேகம், கையில் போதிய பணமும் இல்லாமல், மும்பையில் தங்குவதற்கு எந்தவொரு அறிமுகமும் இல்லாமல், சல்மான் கானின் தொண்டு பற்றிய ஒரு செய்தித்தாளை மட்டுமே நம்பி அசாமில் வந்துள்ளார். வறுமையின் பிடியில் இருந்த அவருக்கு, சல்மான் கான் முன்பு ஒரு ஏழைக்கு நிதியுதவி செய்ததாகப் படித்த ஒரு செய்தி மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்துள்ளது.

இந்த நெடும் பயணத்தின் போது உணவு, தங்குமிடம் அல்லது அவசரத் தேவைகளுக்குக் கூட அவரிடம் போதிய பணம் இருந்திருக்கவில்லை. சல்மான் கான் பாந்த்ராவில் எங்கோ வசிக்கிறார் என்ற ஒரே ஒரு தகவலை மட்டுமே வைத்துக் கொண்டு அவர் இந்தத் துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நடிகர் சல்மான் கான்

நடிகர் சல்மான் கான்

ஜோத்ஸ்னா பேகம் முழுமையாகக் குணமடைந்து, மனநிலை சீராகும் வரை பன்வெலில் உள்ள தங்களது காப்பகத்தில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருடன் பத்திரமாகச் சேர்க்கப்பட்டதாகவும் பாஸ்டர் கே.எம்.பிலிப் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *