“ஐநா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது” – அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!| “The UN has become a useless organization” – Argentine President’s scathing criticism!

Spread the love

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி, பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது என அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே (Javier Milei) கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் பொது விவாதக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “ஐ.நா சபை என்பது நல்நோக்கம் கொண்ட அதிகாரிகளைப் போல வேடமிட்டு, சொகுசு வாழ்க்கை வாழும் பேராசை பிடித்த ஒட்டுண்ணிகளைப் பராமரிக்கும் ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது. வன்முறை, பயங்கரவாதம் மற்றும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறி, அவற்றை ஐ.நா ஊக்கப்படுத்துகிறது.

இஸ்ரேல் விவகாரத்தில் ஐ.நா உறுப்பினர்கள் எப்போதும் எங்கள் நாட்டுக்கு எதிராகவே வாக்களித்து வருகின்றனர். ஃபாக்லேண்ட் (மால்வினாஸ்) தீவுகள் மீதான அர்ஜெண்டினாவின் உரிமை கோரலை மீண்டும் வலியுறுத்துகிறோம். பிரிட்டானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இத்தீவுகளின் பகுதியில் எண்ணெய் பிரித்தெடுக்கும் “சீ லயன்” (Sea Lion) திட்டத்தை எதிர்க்கிறோம். இத்தீவு விவகாரத்தில் ஐ.நா தீர்மானங்களை அமல்படுத்தத் தவறிவிட்டது. எனவே, ஐக்கிய ராஜ்யத்துடன் (UK) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *