ஐநா: `சர்வதேச உச்சி மாநாட்டில் ஒலித்த தமிழரின் குரல்’ – யார் இந்த சதீஷ் குமார்?| Satish Kumar participated in and addressed the summit held at the United Nations.

Spread the love

ஐக்கிய நாடுகள் சபையில் (UN) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில், தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம் மற்றும் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் குமார் சந்தானத்திற்கு “Global Change Maker Honour 2026′ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கட்டடத் துறை நிறுவனமான ‘DAC Developers’-ன் மேலாண் இயக்குநரான சதீஷ் குமார் சந்தானம், ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரண்டாம் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். தாங்குதிறன், நிலைத்த வளர்ச்சி (Sustainable Development) மற்றும் மனித நல்வாழ்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த சர்வதேச மாநாட்டில், உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பொறியாளர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சதீஷ் குமார்

சதீஷ் குமார்

இந்த சர்வதேசச் சபையில் உரையாற்றிய சதீஷ் குமார் சந்தானம், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்கால சமூகங்களுக்கான நீடித்த வாழ்வியல் மற்றும் நிலையான சூழலை உருவாக்குவது குறித்த தனது முக்கிய சிந்தனைகளை முன்வைத்தார். அப்போது, பொதுநலனை மையமாகக் கொண்டு காலத்தைத் தாண்டி சேவை செய்யும் தமிழர்களின் பொறியியல் சிந்தனைக்குச் சான்றாக விளங்கும் ‘கல்லணை’ பற்றியும், அறிவியல் அறிவு, பொறியியல் நுணுக்கம் மற்றும் நிலைத்த கட்டடக்கலையின் ஒருங்கிணைந்த தமிழர் மரபின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் ‘தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம்’ (பெரிய கோயில்) பற்றியும் பெருமிதத்துடன் எடுத்துக்காட்டினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *