ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷீத் கான் தனது சுயசரிதைப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான். இவர் “ரஷீத் கான்: தெருக்களிலிருந்து நட்சத்திர அந்தஸ்து வரை’ (Rashid Khan: From Streets to Stardom) என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனக்கு குடியுரிமை வழங்க முன்வந்ததாகவும், ஆனால் அவற்றை தான் நிராகரித்துவிட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் புத்தகத்தில், “கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) மூத்த அதிகாரி ஒருவர் என்னை அணுகி, `ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அங்குள்ள பிரச்னைகள் உங்களுக்குத் தெரியும். அதனால் நீங்கள் இந்தியாவிலேயே இருந்துவிடுங்கள். உங்களுக்குத் தேவையான இந்திய ஆவணங்கள் அனைத்தையும் நாங்கள் வழங்குகிறோம், நீங்கள் இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாடுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார்.