ஐஸ்வர்யா ராய் தான் என் உயிர் தோழி! விவாகரத்து வதந்திக்கு அபிஷேக் பச்சன் முற்றுப்புள்ளி!

Spread the love

விவாகரத்து வதந்திகள்…

சமீப காலமாக அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து பெறப் போவதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பல வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு இந்தத் தம்பதியினர் தங்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் சவுக்கடி கொடுத்துள்ளனர்.

ஐஸ்வர்யாவின் பதிவு: 19-வது திருமண நாளான ஏப்ரல் 20-ம் தேதி, தனது கணவர் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யாவுடன் சிரித்த முகத்துடன் இருக்கும் அழகான புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இது அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்ற வதந்திகளுக்கு நேரடி முற்றுப்புள்ளியாக அமைந்தது.

ஐஸ்வர்யா - அபிஷேக்

ஐஸ்வர்யா – அபிஷேக்

அபிஷேக்கின் பதிலடி:

ஒரு போட்காஸ்ட் பேட்டியில் விவாகரத்து வதந்திகள் குறித்துப் பேசிய அபிஷேக் பச்சன், “இந்தச் செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறான நோக்கத்துடன் பரப்பப்படுபவை. எங்களுக்குத் திருமணமாவதற்கு முன்பிருந்தே எப்போது திருமணம் நடக்கும் என்றும், திருமணம் முடிந்தவுடன் எப்போது விவாகரத்து நடக்கும் என்றும் அவர்கள் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அவளுக்கு (ஐஸ்வர்யா) என்னைப் பற்றித் தெரியும், எனக்கு அவளைப் பற்றித் தெரியும். நாங்கள் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குடும்பமாக வாழ்கிறோம்; அதுதான் எங்களுக்கு முக்கியம். இதைப் போன்ற வதந்திகள் எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது” என்று மிகக் கடுமையாகப் பதிலளித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *