ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி – 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

Spread the love

இதற்கு காரணம் கடந்த தேர்தலின் போது 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்தார் சக்கரபாணி. இந்த முறை கனிம வள சம்பந்தமாக சக்கரபாணிக்கு எதிர்ப்பு அலை வீசியதோடு, தவெக-வின் வரவும் திமுக-வின் ஓட்டுகளை சிதறடிக்கும் என்பதால் அதிமுக தரப்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பார்த்த நிலையில், த.மா.க-விற்கு ஒதுக்கியதால் அக்கட்சியினர் தொகுதியில் வேலையே செய்யவில்லை.

அமைச்சர் சக்கரபாணி

அமைச்சர் சக்கரபாணி

சக்கரபாணி தரப்பில் தொகுதி மக்களை நன்கு கவனித்ததாகச் சொல்லப்படுகிறது. அதுவும் திமுக எளிதில் வெற்றிக் கோட்டை தொட வித்திட்டிருக்கிறது. இதை தாண்டி ஒரே தொகுதியில் தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றதோடு, எதிர்க்கட்சி வேட்பாளர்களின் டெபாசிட்டையும் காலி செய்திருக்கிறார் சக்கரபாணி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *