‘ஒரு கம்யூனிஸ்ட்காரர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்.!’- சு.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன் | justice G.R Swaminathan criticises s. venkatesan

Spread the love

சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், ” “பெரியார் அறிவுலகம்’ என்று சொல்லப்படுகிற அந்த நூலகங்களின் அடுக்குகளில் எல்லாம், இதுபோன்ற ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் போலிப் புத்தகங்கள்தான் நிறைந்திருக்கின்றன.

அந்தத் தவறுகளால் ஏற்பட்ட பாவமெல்லாம் கழிய வேண்டுமென்றால், ‘மகாபெரியவா’ புத்தகத்தின் அனைத்துத் தொகுதிகளையும், அனைத்துப் பெரியார் அறிவுலக நூலகங்களின் அடுக்குகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் இந்தப் பாவமெல்லாம் நீங்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்” என்று பேசியிருந்தார்.

பெரியார் அறிவுலகம்

பெரியார் அறிவுலகம்

நீதிபதியின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் விவாதமானது. இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “”பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்” என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *